சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் 'பஸ் டே' என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்துவதும், ரயில்களில் 'ரயில் டே' என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மாணவர்களின் இந்த நடவடிக்கை மற்ற பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரயில், பேருந்துகளில் கொண்டாடங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயிலில், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், மின்சார ரயிலுக்கு அலங்காரம் செய்து 'ரயில் டே' கொண்டாடி உள்ளனர்.