தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓசி பிரியாணி தகராறில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை - Chennai Biryani Issue

இலவசமாக பிரியாணி கொடுக்காததால், கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்ட சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலவச பிரியாணி தகராறில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை
இலவச பிரியாணி தகராறில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை

By

Published : Dec 21, 2020, 12:25 PM IST

சென்னை:சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரில் வசித்துவருபவர் ஹரிநாத் (55). இவர் பூவிருந்தவல்லி போக்குவரத்துப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் அருகே மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து பிரியாணி கடை நடத்திவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இலவச பிரியாணி கேட்டு தர மறுத்த கடைக்கார்களுடன் ஹரிநாத் தகராறில் ஈடுபட்டு, அவர்களைத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவிவைரலானது.

இது தொடர்பாக மதுரவாயில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ஹரிநாத் நீண்ட நாள்களாக பிரியாணி கடையில் பணம் கொடுக்காமல் பிரியாணி வாங்கிச் சென்றுள்ளார். தகராறு நடந்த அன்றைய தினம், ஹரிநாத் வழக்கம்போல் இலவசமாக பிரியாணி தருமாறு கேட்டுள்ளார்.

கடை ஊழியர்கள் பிரியாணி காலியாகிவிட்டதாக கூறியதால், ஆத்திரமடைந்த அவர் காவலருக்கே பிரியாணி இல்லை என்று செல்கிறாயா என்று கூறி ஊழியர்களைத் தாக்கியது தெரியவந்தது.

இந்நிலையில், ஹரிநாத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி துணை ஆணையர் தீபா சத்யன் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:10 ரூபாய் பிரியாணி: கோக்குமாக்கானா ஐடியாவால் மாட்டிக்கொண்ட ஓனர்!

ABOUT THE AUTHOR

...view details