தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை இரண்டாவது இடம்! - CBSE 10th Exam results

சென்னை: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் மண்டல அளவில் 98.95% தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

Chennai tops second place in CBSE 10th Board Exam results

By

Published : Jul 15, 2020, 11:33 PM IST

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 18,73,015 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் 17,13, 121 மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வில் 91.46%மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10aaம் வகுப்பு தேர்வு முடிவில் சென்னை மண்டலத்தில் 98.95% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் 99.28% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 98.95% தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்திலும், 98.23% தேர்ச்சியுடன் பெங்களூரு மூன்றாம் இடத்திலும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details