மும்பையில் பெய்யும் கனமழையால் சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பையில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து மும்பை செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையில் இருந்து சென்னை வரும் மூன்று விமானங்களும் ரத்தானது.
மும்பையில் கனமழை: சென்னையிலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிப்பு! - passengers
சென்னை: மும்பையில் பெய்யும் கனமழையால் சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்கப்படும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
flight
மேலும், சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதுவரை சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் 13 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.