சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத்திற்கு இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் வால் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்தது.
இதனால் அதிகாலை 2.20 மணிக்கு விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பிவந்து அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விமானத்திலிருந்த 154 பயணிகள், 5 விமான ஊழியா்கள் உள்பட 159 போ் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.