தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமானத்தில் இயந்திரக் கோளாறு: 172 பயணிகள் உயிர் தப்பினர் - Chennai to Indore flight faced technical issue

சென்னை: சென்னையில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகருக்கு சென்ற விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

flight issue in chennai airport
flight issue in chennai airport

By

Published : Jan 7, 2020, 3:52 AM IST

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.20 மணிக்கு 172 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என 178 பேருடன் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டுப்பிடித்தார்.

இதையடுத்து விமானம் புறப்படவில்லை. விமான பொறியாளா்கள் பழுதடைந்த இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டனா். எனினும் உடனடியாக சரிசெய்யமுடியவில்லை.

இதனால் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானம் இரவு ஒன்பது மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால்178 பயணிகள் உயிர் தப்பினர்.


இதையும் படிங்க: 'மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்... அது இனியும் தொடரும்... '

ABOUT THE AUTHOR

...view details