சென்னை: சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 2 மணி நேரம் காத்திருந்து மாற்று விமானம் மூலம் ஹூப்ளி சென்ற பயணிகள். இன்று (செப்.6) சென்னையிலிருந்து ஹீப்ளி செல்ல 58 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்த போது விமானி விமானத்தில் பழுது இருப்பதை கண்டு பிடித்ததால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதன் பின்பு 58 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு சென்னை உள்நாட்டு விமான ஓய்வறையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர் பின் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்த அதிகாரிகள் 58 பயணிகளையும் ஹீப்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி விமானத்தில் 58 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 64 பேர் பயணிக்க இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். இதையடுத்து விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் விமானத்தை இயக்கும் முன்பு விமானத்தின் இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்த போது விமானத்தில் இயந்திர கோளாறுகள் ஏற்பட்டுள்ளததை விமான ஓட்டிகள் கண்டுபிடித்தார்.
இதையும் படிங்க:கோவை அருகே நாட்டு வெடியை கடித்த யானை பலி.. மரணிக்கும் முன் இரத்தம் சொட்ட வலம் வந்த வீடியோ வெளியீடு!