தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை டூ அயோத்தி விமானம்:அயோத்தி ராமர் கோயிலுக்கு போறீங்களா..டிக்கெட் எவ்வளவு தெரியுமா..? - Ram Mandir

Chennai to Ayodhya flight: அயோத்தி ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

Chennai to Ayodhya flight
சென்னை டூ அயோத்தி விமானம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 6:54 AM IST

சென்னை: புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் ஜன.14 ஆம் தேதி வெகுவிமரிசையாக நடக்க உள்ளது. இதனையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாகவும், பயணிகள் இதற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சென்னை - அயோத்தி - சென்னை இடையே தினசரி விமான சேவையை ஸ்பை ஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம் நடத்துகிறது. இந்த விமானத்தில் பயணிக்க முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை வரும் பிப்.1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு உள்ளது. இதை அடுத்து அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா, வரும் ஜன.22 ஆம் தேதி திங்கட்கிழமை நடக்க உள்ளது. இதனால், சென்னையில் இருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்று தெரிகிறது.

இதை அடுத்து தனியார் விமானம் நிறுவனமான ஸ்பை ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம், வரும் பிப்.1 ஆம் தேதி முதல் சென்னை - அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது.

அதன்படி, வரும் பிப்.1 ஆம் தேதி முதல் சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்றில் இருந்து, இந்த ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பகல் 12:40 மணிக்கு புறப்படும், இந்தப் பயணிகள் விமானம், மாலை 3:15 மணிக்கு, அயோத்தி விமான நிலையம் சென்றடையும். அதன் பின்பு அதே விமானம், மாலை 4:00 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேரும்.

இந்த விமானத்தில் பயணம் செய்வதற்கு விமான டிக்கெட் கட்டணம் ரூ.6,499. மேலும் இந்த விமானம் போயிங் 737-8 ரகத்தைச் சேர்ந்தது. எனவே, இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 180-க்கும் அதிகமான பயணிகள் பயணிக்க முடியும். இந்த அயோத்தி விமானத்தில், பயணம் செய்வதற்கான முன்பதிவை, ஸ்பை ஜெட் தனியார் விமான நிறுவனம் இந்த ஜன.1 தேதி முதல் தொடங்கியுள்ளது.

சென்னை - அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்குவதால், அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் ராம பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் திறப்பு - அமெரிக்காவில் ராட்சத பில்போர்டுகள் மூலம் விளம்பரம்!

ABOUT THE AUTHOR

...view details