தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை - அந்தமான் விமான சேவைகள் ரத்து!. - சென்னை செய்திகள்

சென்னை அந்தமான் விமான சேவைகள் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

chennai airport  flight service  Chennai to Andaman flight  Chennai to Andaman flight services  Chennai to Andaman  chennai  andaman  chennai news  chennai latest news  சென்னை  அந்தமான்  விமான சேவைகள்  விமான சேவைகள் ரத்து  சென்னை அந்தமான் விமான சேவைகள்  சென்னை செய்திகள்  சென்னை விமான நிலையம்
சென்னை அந்தமான் விமான சேவைகள்

By

Published : Nov 16, 2022, 1:23 PM IST

சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அதைப்போல் அந்தமானிலிருந்து சென்னைக்கு தினமும் 7 விமானங்கள் வீதம், நாள் ஒன்றுக்கு சென்னை-அந்தமான்- சென்னை இடையே 14 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

அந்தமானில் பகல் 3 மணியிலிருந்து தரைக்காற்று வீசத்தொடங்கிவிடும். அப்போது அங்கு விமானங்கள் தரையிறங்க,புறப்பட முடியாது. இதனால் அந்தமான் விமானநிலையத்தில் அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும். மாலையிலிருந்து நள்ளிரவு வரை விமான சேவைகள் கிடையாது.

இந்தநிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவியதாலும், அந்தமான் விமான நிலையம் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும், இம்மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை அந்தமான் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அந்தமான் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனா்.

அதோடு அந்தமானுக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியவா்கள், அங்கிருந்து வரவேண்டியவா், மருத்துவ பொருட்கள் போன்றவை எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின்பு இம்மாதம் 5 ஆம் தேதியிலிருந்து அந்தமானுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. இந்நிலையில் தற்போது திடீரென 15 ஆம் தேதியிலிருந்து 18 ஆம் தேதி வரை மீண்டும் அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலை, விமானநிலைய ஓடுபாதை பராமரிப்பு காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இருமுறை 8 நாட்கள் அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள், அந்தமானில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இம்மாதம் தொடக்கத்தில் 4 நாட்கள் விமான சேவைகள் ரத்து செய்தபோதும் மீண்டும் 4 நாட்கள் விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று இந்திய விமானநிலைய ஆணையமோ, சென்னை விமானநிலைய அதிகாரிகளோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: ராமேஸ்வரம்-வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ABOUT THE AUTHOR

...view details