தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுப்பட்டதாக மேலும் 3 பேர் கைது.! - Chennai TNPSC SCAM 3 Arrest

சென்னை: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறை கைது செய்துள்ளது.

Tnpsc cbcid சென்னை டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு ம3 பேர் கைது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு ம3 பேர் கைது டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு TNPSC SCAM 3 Arrest Chennai TNPSC SCAM 3 Arrest TNPSC SCAM CBCID 3 Arrest
TNPSC SCAM 3 Arrest

By

Published : Jan 27, 2020, 10:51 PM IST

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது குறித்து மூன்று பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மூவரும் முறைகேடு செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (30), திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (34), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (33) ஆகிய மூன்று பேரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சீனிவாசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு மேலும் நான்கு பேரிடம் தலா ஐந்து லட்சம் ரூபாய் பெற்று தேர்வு முறைகேடாக எழுத உதவி புரிந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details