தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும்’ - திருநாவுக்கரசர் எம்.பி. - India should be a secular country

சென்னை: மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

By

Published : Jan 26, 2020, 11:57 AM IST

சென்னை விமான நிலையத்தில்திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘71ஆவது குடியரசு தினத்தில் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மதசார்பற்ற நாடாக இந்தியா திகழ வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆகவே, மத்திய பட்ஜெட்டில் இருந்து வேலை கிடைக்கும் வரை இளைஞர்களுக்கு மாத ஊக்கத் தொகை அறிவிக்க வேண்டும்’ என்றார்.

திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

மேலும், கருத்து சுதந்திரம் இருப்பதால் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் பெரியார் உள்பட தலைவர்களின் சிலைகளை உடைப்பது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற அதிமுகவும் காரணம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சசிகலா விடுதலையாவதால் எந்த பாதிப்பும் இல்லை - அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details