சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதன் முடிவுகள் சிபிஎஸ்இ குழுவின் அதிகாரப்பூர்வ வலைதளமான cbseresults.nic.in இல் கிடைக்கும்.
இது தவிர, digilocker.gov.in இணையத்திலும் தரவுகளைச் சரிபார்த்துக்கொள்ளலாம். இதற்கு மாணவர்களின் பட்டியல் எண் (ரோல்) அவசியம். மேலும், சிபிஎஸ்இ பாஸ் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், இடம்பெயர்வு சான்றிதழ்களும் டிஜிலாக்கர் சேவையில் கிடைக்கும்.
மதிப்பீடு முறை
தேர்வின் மதிப்பீட்டுத் திட்டத்தின் படி, 20 மதிப்பெண்கள் பள்ளிகளால் நடத்தப்பட்ட உள் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டும், 10 மதிப்பெண்கள் அவ்வப்போது நடத்தப்பட்ட யூனிட் தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டும், 30 மதிப்பெண்கள் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை கொண்டும், மீதம் உள்ள 40 மதிப்பெண்கள் மாணவர்களின் செயல்பாடுகளை கொண்டும் மதிப்பிடப்பட்டுள்ளது.