தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை தீவுத்திடல் டிச.30 முதல் பொருட்காட்சி! - தீவுத்திடல் பொருட்காட்சி

சென்னை தீவுத்திடலில் 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, வரும் 30-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Chennai
Chennai

By

Published : Dec 27, 2022, 4:54 PM IST

சென்னை: சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெறும். இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவுத்திடல் பொருட்காட்சி நடைபெறவில்லை.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. இந்த 47ஆவது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளமானவை இடம் பெறவுள்ளன.

இதில் தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 நாட்களுக்கு பொருட்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொருட்காட்சி நடத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "புத்தாண்டு கொண்டாட்டங்களில் கரோனா கட்டுப்பாடு" அமைச்சர் மா.சு. அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details