தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீரில் மூழ்கியவரை தீயணைப்பு துறையினர் தேடிவருகின்றனர்! - தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி

சென்னை: நங்கநல்லூரில் உள்ள கோயில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.

சென்னை
chennai-temple-lake

By

Published : Dec 4, 2019, 2:20 PM IST

சென்னை மீனம்பாக்கம் அடுத்த நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த ரூபன் (வயது 27) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் நண்பர்களுடன் நங்கநல்லூர் 48 வது தெருவில் உள்ள சிவன்கோயிக்குச் சொந்தமான குளத்தில் குளிக்கச் சென்றார். ரூபன் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவருக்கு மூச்சு தினறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உள்ளார்.

பின்னர் அவரின் நண்பர்கள் மீட்க முயற்சித்தும் முடியவில்லை என்பதால் தீயனைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் கிண்டி மற்றும் சானிடோரியம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய ரூபனை தேடிவருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கோவை டவுன்ஹால் கடையில் தீ விபத்து!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details