சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 15 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மதுபானக் கடையின் மேலாளர் சங்கர் கணேஷ் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் சென்ட்ரல், வேலூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தேடியுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் கரும்பத்தூர் பகுதியில் மறைந்திருந்த சிவா (எ) குபேரன் (44) என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.