தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக எப்போதும் வன்முறையை மட்டுமே கையிலெடுக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார் - சென்னை அமைச்சர் ஜெயக்குமார் திமுக மீது குற்றச்சாட்டு

சென்னை: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக வன்முறையை மட்டுமே கையிலெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக எப்போதும் வன்முறை கட்சி என குற்றச்சாட்டு
திமுக எப்போதும் வன்முறை கட்சி என குற்றச்சாட்டு

By

Published : Jul 16, 2020, 5:02 PM IST

Updated : Jul 16, 2020, 5:27 PM IST

சென்னை தம்புசெட்டி தெருவில் கரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "12ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளராமல் வைராக்கியத்தோடு தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும்.

சென்னையில் எந்த அளவுக்கு நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோமோ, அதேபோலதான் கிராமங்களிலும் முகாம்கள் அமைத்து, தடுப்பு நடவடிக்கைகள் செய்துவருகிறோம். திமுக வன்முறை கட்சியாகவே உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அக்கட்சி எப்போதும் வன்முறையையே கையிலெடுத்து செயல்பட்டது.

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இன்றைக்குக்கூட திமுக எம்எல்ஏவின் வீட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட உபயோகிக்கப்பட்ட தோட்டாக்களும் கள்ளத் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் எத்தனை திமுக எம்எல்ஏக்கள் கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. இவர்களுக்கு வாக்களித்த மக்களின் நிலை என்ன? இதை தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்றார்.

Last Updated : Jul 16, 2020, 5:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details