தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தில் பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கொள்ளை! - fancy store theft

சென்னை: தாம்பரத்தில் பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து 6 ஆயிரம் ரூபாய் பணம், 3 செல்போன்கள், பரிசு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

சென்னை
சென்னை

By

Published : Jan 26, 2021, 2:21 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த சதீஸ்குமார், பேன்சி பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றிரவு(ஜன.25) வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

தாம்பரத்தில் பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கொள்ளை

இந்நிலையில், இன்று (ஜன.26) காலை கடைக்கு வந்த சதீஸ்குமார், பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்கையில், 6 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 3 செல்போன்கள், பரிசு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details