தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்து முடக்கம் : அமலாக்கத்துறை நடவடிக்கை! - state bank of india

சென்னை சுரானா குழும நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.124 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 31, 2023, 7:53 PM IST

சென்னை:சென்னையை தலைமையிடமாகக்கொண்டு 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சுமார் 3 ஆயிரத்து 986 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்து ரூ.1,301.76 கோடியை கடனாக பெற்றுள்ளது. அதேபோல, சுரானா பவர் லிமிடெட் ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்து ரூ.1,495.76 கோடியை கடனாக பெற்றுள்ளது. மேலும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் பணத்தை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து கடனாக பெற்றுள்ளது. இப்படி பல்வேறு வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்ற அந்த நிறுவனம், கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இதையும் படிங்க:செங்கோல் கட்டுக்கதையா? 1947 ல் நடந்தது என்ன? - பத்திரிகையாளர் இந்து என்.ராம் விளக்கம்

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கடந்தாண்டு ஜூலை 12-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே சுரானா குழும நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 124 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்கள், ரூபாய் 11.62 கோடி மதிப்பிலான நகை, விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக சுரானா குழுமத்திற்கு சொந்தமான மேலும் 124 கோடி மதிப்புள்ள 78 அசையா சொத்துகள் மற்றும் 16 அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுவரை இவ்வழக்கில் சுரானா குழுமத்துக்கு தொடர்புடைய 248.98 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் கெஜ்ரிவால்... என்னவாக இருக்கும்?

ABOUT THE AUTHOR

...view details