சென்னை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகக் கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை தான் ரயில் சேவை இருந்ததுள்ளது. இதனையடுத்து பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து நெரிசலையும், பயண நேரம் குறைப்பதற்கும் சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாரிப்பேட்டை, மயிலாப்பூர், திருவான்மியூர் வழியாக வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை 1997ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சென்னை புறநகர்ப் பகுதியிலிருந்து, சென்னை நகருக்குள் வேலைக்கு வருபவர்கள் இடைய இந்த பறக்கும் ரயில் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், வேளச்சேரி வரை இருந்த பறக்கும் ரயிலானது, பரங்கிமலை வரை நீடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 4-ஆவது வழித்தடத்திற்கு பணிகள் நடைபெற உள்ளது.
4வது வழித்தடம்: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4வது ரயில் பாதை அமைக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ரூ.280 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது. இந்த 4-ஆவது பாதைக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த 4வது, ரயில் பாதை காரணமாக, வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே உயர்மட்ட பாதை ரயில்கள் (மேம்பாலத்தில் செல்லும் ரயில்) இன்று (27.08.2023) முதல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புறநகரிலிருந்து கடற்கரை வரை: சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்குக் கடற்கரை வழியாகத் தினமும் 59 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டிருந்தன. இந்த 59-ரயில்களும், கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாத காலத்திற்கு, பறக்கும் (சென்னை கோட்டை, பூங்கா ரயில்நிலையம், சிந்தாரிப்பேட்டை) ஆகிய 3 ரயில்நிலையங்களில் அதாவது 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது எனச் சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3வது நபர்களை வைத்து ஆய்வு செய்வதா? - ஆசிரியர்கள் கொந்தளிப்பு