தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி! - Chennai sub inspector

சென்னை: பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Corona positive case tamilnadu  சென்னைச் செய்திகள்  corona district news  Chennai sub inspector  Chennai sub inspector corona positive
சென்னை உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி!

By

Published : Apr 19, 2020, 12:14 PM IST

சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் ஒருவர் கடந்த சில நாட்களாக பாரிமுனைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவருக்கும் இவருடன் பணியாற்றும் காவலர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 18) இரவு தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், உதவி ஆய்வாளரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

சென்னை உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி!

தற்போது, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவர் பணிபுரிந்த காவல்நிலையம் மற்றும் பயன்படுத்திய வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:அரியலூரில் மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details