சென்னை:சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் தெரு விளக்கு பராமரிப்புக்காக 27 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
மாநகராட்சியில் உள்ள தெரு விளக்கு செயல்பாடு மற்றும் பராமரிப்பிற்காக பிப்ரவரி 19, 2021 முதல் பிப்ரவரி 18, 2022 வரை ஒரு ஆண்டிற்கு டெண்டர் விடப்பட்டது.
அவ்வாறு விடப்பட்ட டெண்டர் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால், ஆகஸ்ட் 2ஆம் தேதி மண்டலம் 1,2,3,4,6,7,11,12,14 மற்றும் 15 ஆகிய 10 மண்டலங்களில் ரூ. 27.3 கோடிக்கு விடப்பட்ட டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
மாநகராட்சி விளக்கம்
தெரு விளக்குகளை பராமரிக்க ஐடிஐ தகுதியுடன் தேவையான எண்ணிக்கையிலான மின்பொறியாளர்களை ஒப்பந்ததாரர்கள் வழங்கவில்லை. விளக்குகள் பழுதானால், உடனடியாக மாற்றப்படுவதில்லை. தெருவிளக்குகளை சரிசெய்யத்தேவையான பொருட்கள், ஏணிகளை வழங்கவில்லை. இதன் காரணமாக டெண்டர் ரத்து செய்ததாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முறையான பதில் இல்லை
அதுமட்டுமின்றி ஒப்பந்ததாரர்கள் தெருவிளக்குகளைப் பராமரிக்க 27 வகையான பொருட்களை வழங்க வேண்டும், ஆனால் அவ்வாறு வழங்காமல் தரமற்ற பொருட்கள் வழங்குகின்றனர்.