சென்னை:ஐ.சி.எப்-இல் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 67 வயதான பெண் இதய குழாய் (மிட்ரல் வால்வு) பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த பாதிப்பு அவருக்கு நீண்ட நாட்களாக இருப்பதாகவும், இதயத்தின் இடது ஆரிக்கள், மற்றும் இடது வென்டிரிக்கிளை இணைக்கும் வால்வான மிட்ரல் வால்வு என்பது பாதிக்கபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வால்வு பாதிப்பு காரணமாக நீண்ட நட்களாக அவதி பட்ட நிலையில், தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவருக்கு, மிட்ரல் வாழ்வு பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மிட்ரல் வால்வை மாற்ற முடிவு செய்யப்பட்டது.