தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களை பின்தொடரும் நீட் தேர்வு.. மரணங்களுக்கும், தேர்வுக்கும் விலக்கு அளிக்கப்படுமா? - r n ravi

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவரை தொடர்ந்து அவர் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களை பிண்தொடரும் நீட் தேர்வு: மரணங்களுக்கும் தேர்வுக்கும் விளக்கு அளிக்கப்படுமா?
மாணவர்களை பிண்தொடரும் நீட் தேர்வு: மரணங்களுக்கும் தேர்வுக்கும் விளக்கு அளிக்கப்படுமா?

By

Published : Aug 14, 2023, 10:55 PM IST

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வால், அனிதா தொடங்கி பல்வெறு மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது மருத்துவ கணவை கைவிட வேண்டிய சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பது எட்டு மடங்கு குறைந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்போது மற்றொரு மாணவரும் நீட் தேர்வுக்கு பலியாகி உள்ள சம்பவம் பெரும் வேதனையை அளிக்கிறது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் 12ஆம் வகுப்பு படித்து முடித்த பின்னர் மருத்துவ படிப்பில் அதிக ஆர்வம் இருந்ததால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இருமுறை தேர்வெழுதியும் தேர்ச்சி பெறாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறையில் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். மகன் ஜெகதீஸ்வரனின் இறப்பை தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மாணவர் மற்றும் அவரது தந்தையின் மரணம் குறித்து அறிந்து வேதனையடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில மாதங்களில் தாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும் எனவும், கையெழுத்து போடமாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள் எனவும், இதுவே நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கும் என்றும் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசி வரும் ஆளுநரை வன்மையாக கண்டிப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகஸட் 15ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேநீர் விருந்தை புறக்கணித்து தன் கண்டணத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எப்படியாவது தமிழகத்தில் ஆட்சிப் பீடத்தில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை திமுக அரசு அளித்ததாகவும், பின் மக்களை ஏமாற்றி பின்புற வாசல் வழியாக திமுக அரசு ஆட்சியைப் பிடித்ததாகவும் கூறினார். மேலும் திமுகவின் போலி வாக்குறுதிகளில் ஒன்று தான் நீட் ரத்து என்றார்.

இதனிடையே, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து இருந்தால், இதுபோன்ற சோக நிகழ்வுகளை நிச்சயம் தவிர்த்து இருக்க முடியும் என நீட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

அதேநேரம் இது குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், "மாணவர் சமுதாயத்தை, நீட் தேர்வின் மூலம் இடம் கிடைக்காவிட்டால் நீங்கள் உயிரிழக்கலாம், அப்படி உயிரிழந்து விட்டால் நீங்கள் பெருமைப்படுத்தப்படுவீர்கள், உங்கள் குடும்பத்துக்கு உதவி கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை திமுக ஏற்படுத்தியதாக" கூறினார்.

இதற்கு முன் பெரம்பலூரில் ஒரு மாணவி இறந்தவுடன் அதை மிகப்பெரிய அரசியலாக மாற்றி அதில் குளிர் காய்ந்தவர்கள் திமுகவினர் என்றும் ஆட்சி அதிகாரங்கள் இவர்களிடம் இருக்கும் போதும் இம்மாதிரியான தற்கொலைகள் ஏன் நடைபெறுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பிடிவாத குணம் மாணவர் உயிரிழப்புக்கு பிறகாவது மாறுமா என்று கேள்வி எழுப்பிய விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் மாளிகையில் பெற்றோர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆணவத்தோடு பதில் கூறியதாக தெரிவித்தார். அவர் பேசி இருப்பது வலியை தருவதாகவும், ஒரே நேரத்தில் மகன் மற்றும் தந்தையை இந்த நீட் தேர்வு பலி வாங்கி உள்ளதாகவும், ஆளுநரின் பிடிவாதம் 2 உயிர்களை பலி வாங்கி உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: "நீட் மசோதாவில் தாமதம் வேண்டாம்" - குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details