தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹை..! பாடி மசாஜ்.. குதூகலமாக சென்ற இளைஞரை கட்டிப்போட்டு ரூ.2.5 லட்சம் கொள்ளை.! போலீசார் விசாரணை! - body massage

சென்னை நுங்கம்பாக்கத்தில் மென்பொறியாளருக்கு மசாஜ் செய்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து நகை மற்றும் பணம் பறித்து மர்ம கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மசாஜ்
மசாஜ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 7:02 PM IST

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம் கோபால்நகா் நியூ காலனி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். இவர் தனியாா் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவா் மசாஜ் செய்வதற்காக கைப்பேசி செயலியில் தனது விவரங்களை கடந்த 7ஆம் தேதி (வியாழக்கிழமை) பதிவு செய்து உள்ளார்.

இதையடுத்து அவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்ததுள்ளது. அதில் பேசிய நபா், செயலியில் காா்த்திக் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் உள்ள ஒரு சா்வீஸ் அப்பாா்ட்மெண்டில் மசாஜ் செய்ய வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. காா்த்திக்கும் அந்த சா்வீஸ் அப்பாா்ட்மெண்டுக்கு சிறிது நேரம் கழித்து சென்றுள்ளார்.

இதையும் படிங்க:"ஆதாயம் முக்கியமில்லை.. பிள்ளைங்களோட அன்பு மட்டும் போதும்..." 2 ரூபாய்க்கு இட்லி விற்கும் தனம் பாட்டி!

அப்போது அங்கு இருவர் நின்று உள்ளனர். அவர்கள் கார்த்திக்கை சர்வீஸ் அப்பாட்மெண்டில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று, கீழே தள்ளிவிட்டு வீட்டின் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் கார்த்திக்கின் கை, கால்களை கட்டிப்போட்டு அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் மர்ம கும்பல் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின் மர்ம நபர்கள் அவரின் வங்கி கணக்கில் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை செல்போன் மூலம் பறிவர்த்தனை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மர்ம கும்பல் மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.

பின்னர், இது குறித்து கார்த்திக் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஆட்டோ மூலம் எழும்பூர் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீசாரின் கவனத்தை திசை திருப்ப மர்ம கும்பல் ரயில் நிலையம் சென்றனரா. அல்லது வேறெதும் திட்டம் உள்ளதான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மசாஜ் செய்வதாக கூறி கை, கால்களை கட்டுபோட்டு தங்க நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சென்னை கிரைம்: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டுப் பத்திரம் மாயம்.. பெட்ரோல் பங்க் வசூல் பணத்துடன் தப்பிய ஊழியர்..

ABOUT THE AUTHOR

...view details