இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அட்டவணையில், சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சென்னை சென்னை மாநகராட்சி, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஆதிதிராவிடர் நலத் துறை உள்ளிட்ட மாநில அரசின் அனுமதி பெற்ற பள்ளிகளுக்கான தேர்வுகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடத்தப்பட்டுவருகின்றன.
அதன்படி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்தேர்வும், ஒன்பதாம் வகுப்புக்கு ஆண்டுத்தேர்வும் நடத்தப்படவுள்ளது. அதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆறு, எட்டாம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வினை போல் மாணவர்கள் விடைத்தாளை படிப்பதற்கு 10 நிமிடம், வினாத்தாளில் விவரங்களைப் பூர்த்திசெய்ய ஐந்து நிமிடம் உள்ளது. மொழிப் பாடங்களுக்கு இரண்டரை மணிநேரம் தேர்வும், பிற பாடங்களுக்கு இரண்டு மணி நேரம் 15 நிமிடமும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு கால அட்டவணை
- மார்ச் 30 - தமிழ்
- ஏப்ரல் 1 - ஆங்கிலம்
- ஏப்ரல் 2 - உடற்கல்வி
- ஏப்ரல் 8 - கணக்கு
- ஏப்ரல் 15 - அறிவியல்
- ஏப்ரல் 17 - சமூக அறிவியல்
எட்டாம் வகுப்பு கால அட்டவணை
- மார்ச் 30 - தமிழ்
- ஏப்ரல் 1 - ஆங்கிலம்
- ஏப்ரல் 2 - உடற்கல்வி
- ஏப்ரல் 8 - அறிவியல்
- ஏப்ரல் 15 - சமூக அறிவியல்
- ஏப்ரல் 17 - கணக்கு