கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், சென்னையில், அண்ணாநகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் இணைந்து முகக்கவசம் வழங்குதல், சிறப்பு மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் சென்னையில் அதிக கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 26 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிபுரிபவர்களை கடைக்கு அருகில் வீடு எடுத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.