தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் 716 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,718ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் முனைப்பாக ஈடுபட்டு வந்தாலும், பரவல் குறையவில்லை.
சென்னையில் நேற்று (மே 13, 2020) ஒரே நாளில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,882ஆக அதிகரித்துள்ளது. தற்போது மண்டல வாரியாக கரோனா பாதிக்கப்பட்டோரின் விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
மண்டல வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் மேலும், 814 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி