தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர்: 4 காவலர்கள் பணியிட மாற்றம்! - ரவுடி சங்கர் என்கவுண்டர்

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் தொடர்புடைய நான்கு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடி சங்கர் என்கவுண்டர்: 4 காவலர்களை பணியிட மாற்றம்!
ரவுடி சங்கர் என்கவுண்டர்: 4 காவலர்களை பணியிட மாற்றம்!

By

Published : Aug 26, 2020, 10:50 AM IST

சென்னை அயனாவரத்தில் கடந்த 21ஆம் தேதி, ரவுடி சங்கரை காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் ஐந்தாவது நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் விசாரணை நடத்தினார்.

நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் மருத்துவமனைக்கு வந்து இறந்த ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகாவிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் காவல் ஆய்வாளர் நடராஜன், காவலர்கள் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் என்கவுன்ட்டர் நடந்த நியூஆவடி சாலைக்குச் சென்று ஆய்வு செய்தார். அந்த இடத்தில் மூன்று கிலோ கஞ்சா, அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் உடற்கூறாய்வு நடைபெற்ற பின்பு, 'ரவுடி சங்கரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம்' எனக் கூறி, மூன்று நாட்களுக்குப் பின்னரே, அவரது உடலை உறவினர்கள் வாங்கினர்.

மேலும் காவல் ஆய்வாளர் நடராஜன் முன்விரோதம் காரணமாகவே ரவுடி சங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தேசிய மனித உரிமைகள் ஆணைய விதிகளின் படி சுட்டுக்கொன்ற காவல் துறையினரே வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், சிபிசிஐடியிடம் இந்த வழக்கை ஒப்படைக்க காவல் துறையினர் பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் ரவுடி சங்கர் வெட்டியதாக கூறப்பட்ட அயனாவரம் காவல் நிலைய காவலர் முபராக், ஜெயப்பிரகாஷ், வடிவேல், காமேஷ் பாபு ஆகிய நான்கு காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க...ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details