தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆந்திராவில் பிடிபட்ட பிரபல ரவுடி! - தமிழக காவல்துறை

சென்னை: தலைமறைவாக இருந்து வந்த ரவுடி ஆற்காடு சுரேஷ், தனது கூட்டாளி ராஜேஷ் என்பவருடன் தனிப்படை காவல் துறையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் பிடிப்பட்ட பிரபல ரவுடி

By

Published : Nov 18, 2019, 6:44 PM IST

சென்னையைச் சேர்ந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் மீது, வழக்கறிஞர் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உட்பட 7 கொலை வழக்குகளும், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புளியந்தோப்பு காவல் துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பின்னர், பிணையில் வெளிவந்த ஆற்காடு சுரேஷ், முறையாக காவல் நிலையத்தில் கையெழுத்திடாமலும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலும் தலைமறைவாக இருந்ததாலும், புளியந்தோப்பு காவல் துறையினர் அவரைத்தேடி வந்தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷின் கூட்டாளி ராஜேஷ்

இந்நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆந்திராவில் இருப்பதாக கிடைத்தத் தகவலின்படி, புளியந்தோப்பு தனிப்படைக் காவலர்கள் அங்கு சென்று, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி இராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதையும் பார்க்க: டிக் டாக்கில் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய இளம்பெண் கைது..!

ABOUT THE AUTHOR

...view details