மாங்காடு அடுத்த லட்சுமிபுரம் சாலையில் செல்போனில் பேசியபடி இளைஞர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் அந்த இளைஞரை பின் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், கல்லை எடுத்து தாக்க முயன்றார்.
இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரது செல்போனை பறித்துச் சென்றனர். முன்னதாக, சாலையோரம் இருந்த கற்களை நான்கு பேரும் கைகளில் எடுத்துக் கொண்டு வருவது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளன.