ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு ஆர்.கே. நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அதிமுக வேட்பாளரும், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ். ராஜேஷ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவரை தொடர்ந்து பைக்கில் கட்சி கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி கொருக்குப்பேட்டை சி.பி.ரோடு வழியாக சுண்ணாம்பு கால்வாய் மணலி சாலை, தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் தெரு, டி.எச்.ரோடு, புதுவண்ணாரப்பேட்டை, டோல்கேட், காசிமேடு, ஆகிய பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்.கே. நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பைக் பேரணி! - சென்னை ஆர்.கே.நகர் பைக் பேரணி
சென்னை: ஆர்.கே. நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் பைக் பேரணி நடைபெற்றது.
![ஆர்.கே. நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பைக் பேரணி! chennai-rk-nagar-bike-rally](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11263605-thumbnail-3x2-as.jpg)
chennai-rk-nagar-bike-rally
ஆர்.கே.நகரில் இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு பைக் பேரணி
இதையும் படிங்க: கனிமொழிக்கு கரோனா உறுதி