சென்னையில் இன்று (ஆக.21) காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய சென்னை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தி- நகர் ஆகிய பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேல் சென்னை முழுவதும் கனமழை பெய்ததால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டு போக்குவத்துக் காவலர்கள் சாலைகளைக் கண்காணித்தும் வருகின்றனர்.