சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 31) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் நிலவும் கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழ்நாடு மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 1)வானிலை நிலவரம்
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
பிப்ரவரி 2 முதல் பிப்வரி 4 வரை