சென்னை:தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி, மத்திய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மும்பையிலிருந்து சென்னை வந்த 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்
சென்னை: மும்பையிலிருந்து ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.
தொடர்ந்து, மும்பையிலிருந்து விமானம் மூலம் ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று(மே.6) சென்னை கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து தடுப்பூசி மருந்து அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 24,898 பேருக்கு கரோனா தொற்று!