தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இங்கிலாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த மருத்துவ உபகரணங்கள்!

சென்னை: இந்திய விமானப்படைக்கு சொந்தமான கிலோபல் மாஸ்டர் விமானம், இங்கிலாந்திலிருந்து காலி ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட 35 டன் மதிப்பிலான அத்தியாவசிய உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு வந்தடைந்தது.

மருத்துவ உபகரணங்கள்
மருத்துவ உபகரணங்கள்

By

Published : May 4, 2021, 5:06 PM IST

கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் பல இடங்களில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான கிலோபல் மாஸ்டர் விமானம், ஜாம்நகர் விமானபடை தளத்தில் இருந்து புறப்பட்டு தொடர்ந்து 11 மணி நேரம் பயணித்து இங்கிலாந்தில் உள்ள பிரைஸ் நார்டன் பகுதிக்கு சென்று அங்கிருந்து அத்தியாவசிய உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள்

இந்த விமானம் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது. இதில் காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட 35 டன் மருத்துவ கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்த மருத்துவ உபகரணங்கள்

இதையும் படிங்க:காஞ்சியில் அதிகரிக்கும் கரோனா: தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details