சென்னை:தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 2 லட்சம் கரோனா தடுப்பூசி - Hyderabad sent 2 lakh doses of Covaxin
ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன.
Vaccine from hyderabad
இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் இரண்டு லட்சம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு அவை கொண்டு செல்லப்பட்டன.