கோடைக்காலம் முடிந்தும் குடிநீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நிலையில், பருவமழை பொய்த்துபோனதும் குடிநீர் பஞ்சத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பல மாதங்களாக சென்னையில் மழை பெய்யாததால் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளும் வற்றின.
பல மாதங்கள் கழித்து மழையைப் பார்த்து மகிழ்ந்த சென்னைவாசிகள்! - Chennai rains today
சென்னை: தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ள நிலையில், பல மாதம் கழித்து சென்னையின் முக்கியப் பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை
இந்நிலையில் இன்று நண்பகல் முதல் சென்னையின் திருவான்மியூர், அடையாறு, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல் பூந்தமல்லி பகுதிகளிலும் அரைமணி நேரம் மழை விடாமல் பெய்தது. கிட்டத்தட்ட 196 நாட்களுக்கு பிறகு மழைபெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.