தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - chennai rain update

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

chennai-rain-update
chennai-rain-update

By

Published : Aug 2, 2021, 1:43 PM IST

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், "தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட் 4 முதல் 6 வரை: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை

தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

ஆகஸ்ட் 2 முதல் 6 வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இன்று பூமிக்கு மிக அருகே வரும் ’சனி’ கோள்!

ABOUT THE AUTHOR

...view details