நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோமொபைல் சரக்குகளை தொடர்ந்து ஏற்றும் சரக்கு ரயில் பணிமனைகளுள் வாலாஜாபாத் ரயில் பணிமனையும் ஒன்றாகும். வாலாஜாபாத் சரக்கு ரயில் பணிமனையானது, 2016-17ஆம் ஆண்டு முதல் ஆட்டோமொபைல் பொருள்களை ஏற்றுகிறது. இரண்டு லாஜிஸ்டிக் நிறுவனங்கள், அதாவது TCOI, JKTI ஆகிய நிறுவனங்கள் ரயில்வேக்கு (வெளிப்புற, உட்புற போக்குவரத்து இரண்டும்) சரக்கு போக்குவரத்து வணிகத்தை வழங்குகின்றன.
மூன்றாவது புதிய நிறுவனமான M/s IVC லாஜிஸ்டிக்ஸ், சென்னை ரயில்வே கோட்டத்துடன் தற்போது இணைந்து, ஆட்டோமொபைல் சரக்குகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்கான வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள நௌதன்வா ரயில் நிலையம் வழியாக நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆட்டோமொபைல் பொருள்களை சென்னை ரயில்வே கோட்டம் இயக்குவது இதுவே முதல் முறையாகும். நௌதன்வாவிலிருந்து, ஏற்றப்பட்ட கார்கள் நேபாளத்தின் லும்பினி மாவட்டத்தில் உள்ள காத்மாண்டு, மகேந்திர நகருக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படும்.
இந்த சரக்குகள் கிட்டத்தட்ட 2208 கி.மீ., தூரத்திற்கு ரயில் மூலம் கொண்டுச் செல்வதன் மூலம் ரூ. 18.27 லட்சம் வருவாயை ரயில்வே ஈட்டுகிறது. நடப்பு ஆண்டில் சராசரியாக மாதத்திற்கு 2-3 சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.