சென்னை: சென்னையில் இருந்து, ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரயில்கள் நாளை (அக்.12) ரத்து செய்படுவது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னை சென்ட்ரல் - கூடுர் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் நாளை (அக்.12) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேப்போல் சென்னை சென்ட்ரலிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 5.20, காலை 7.45 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டையிலிருந்து பகல் 12.35, மாலை 6.40 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆவடியிலிருந்து சென்ட்ரலுக்கு காலை 4.25, காலை 6.40 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சூலூர்பேட்டை-நெல்லூர்: இதுபோல் சூலூர்பேட்டையிலிருந்து நெல்லூருக்கு காலை 7.55, காலை 10 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும், மறுமார்க்கமாக நெல்லூரிலிருந்து காலை 10.20, மாலை 4.15 மணிக்கு புறப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.