தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

50% பயணிகளுடன் புதுச்சேரிக்கு பேருந்து சேவை - chennai-puducherry bus service resume

நேற்று முதல் 50 விழுக்காடு பயணிகளுடன் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

chennai-puducherry bus service resume
chennai-puducherry bus service resume

By

Published : Nov 2, 2020, 5:02 PM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக நீண்ட காலமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை நேற்று (நவ. 1) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. புதுச்சேரிக்கு கடந்த 12 மணி நேரத்தில் ஈ.சி.ஆர் சாலை வழியாக 30 பேருந்துகளும், திண்டிவனம் வழியாக 36 பேருந்துகளும் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கூறுகின்றனர். நோய் தொற்று பரவல் காரணமாக மக்கள் பேருந்தில் பயணிப்பது குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் அத்தியாவசிய பணிகளுக்காகவும், வேலைக்காகவும் செல்பவர்கள் மட்டுமே பேருந்துகளில் பயணித்து வருவதாகக் கூறப்படுகிறது. பேருந்துக்கு சுமார் 35 முதல் 40 பயணிகள்வரை மட்டுமே பயணம் செய்வதாகவும், மக்கள் வருகை குறைவாக இருந்தாலும், கரோனா முன்னைச்சரிக்கை விதிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான பயணிகளை மட்டுமே அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர்.

முன்னதாக மருத்துவமனை, தொழில் நிறுவனங்கள் செயல்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில், கரோனா பொது முடக்கத்துக்குப் பின் முதல்முறையாக தமிழ்நாட்டிற்கு வெளியே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details