சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அடங்கிய, 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 13வது முறையாக நீட்டித்த நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையும் படிங்க:3வது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை புறக்கணித்த டெல்லி முதலமைச்சர்..!