சென்னை: சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து பெரும்பாலான மாணவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
சில மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 19) காலை சதீஷ்குமார் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் உள்ள அறைகளில் இருந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக மாநில கல்லூரியின் முதல்வர் மற்றும் காவல்துறையினருக்கு சக மாணவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் விரைந்து வந்து மாணவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல இதையடுத்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட சதீஷ்குமார் படித்துக் கொண்டே பார்ட் டைமாக பீட்சா டெலிவரி வேலை பார்த்து வந்ததும், அவருடைய அறையில் சோதனை செய்தபோது தற்கொலை கடிதம் உள்ளிட்ட எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:'போன் எடுக்க இவ்வளவு நேரமா?' என கேட்ட தாய் - மனமுடைந்த மகள் தூக்கிட்டுத் தற்கொலை