சென்னை துறைமுகத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான கண்டெய்னர் லாரிகள், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காகச் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்தத் தளர்வுகளற்ற ஊரடங்கு சமயத்தில், மோட்டார் சைக்கிளுக்கும் இ-பாஸ் வழங்கி அனுமதியளிக்ககோரி தமிழ்நாடு அரசுக்கு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை துறைமுகம்: 'மோட்டார் சைக்கிளுக்கும் இ-பாஸ் வழங்க கோரிக்கை! - chennai port issue regarding epass for bike riders
சென்னை: காசிமேடு பூஜ்ய கேட் அருகே அலுவலகப் பணிக்காக மோட்டார் சைக்கிளுக்கும் இ-பாஸ் வழங்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
இதுகுறித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் பேசுகையில், "கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு இ-பாஸ் அனுமதியளக்கப்பட்டிருந்து. ஆனால், தற்போது உள்ள தளர்வுகளற்ற ஊரடங்கில் எங்களுடைய இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. காரில் சென்று பணி செய்யுமாறு கூறுகின்றனர்.
அனைவரும் சிறுதொழில் செய்து வருகிறோம். இ-பாஸ் அனுமதி பெற துறைமுக நிர்வாகத்திற்குப் பல முறை மெயில் அனுப்பியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் பணியாளர்களுக்கு முறையான இ-பாஸ் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இன்று(மே.30) முதல் வாகனங்களை இயக்க மாட்டோம்" என்றார்.