தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல் - இப்படி ஒரு காரணமா? - சென்னையில் போலீசார் அதிரடி சோதனை

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னையில் 4 இடங்களில் சென்னை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 15, 2022, 9:24 PM IST

சென்னை: என்ஐஏ வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் நான்கு இடங்களில் போலீசார் இன்று (நவ.15) சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முத்தியால்பேட்டை பகுதியைச்சேர்ந்த ஆரூன் ரஷித் என்பவர் வீட்டில் இருந்து ரூ.4,90,000 சீனக்கரன்ஸி, ரூ.1600, தாய்லாந்து கரன்ஸி ரூ.4820, மியான்மர் கரன்ஸி ரூ.50,000 மற்றும் மண்ணடி பகுதியில் உள்ள அவரது டிரேடிங் கம்பெனியிலிருந்து 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சோதனை நடந்த இடத்திலிருந்து மின்னணுப் பொருட்கள், லேப்டாப், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இந்தப் பறிமுதல் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணுப்பொருட்களை தடயவியல் துறையினருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் தான் முட்டுக்கட்டை'

ABOUT THE AUTHOR

...view details