சென்னை பெரம்பூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி தில்லி ராணி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டிற்கு அருகில் உள்ள ஒருவரிடம் சீட்டு பணம் கட்டி வந்துள்ளார். இந்நிலையில் தில்லி ராணியின் பணம் 75 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் அந்த நபர் பணத்தை திரும்ப தர மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூதாட்டி, முதலமைச்சர் அலுவலகத்திலும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மூதாட்டி கூறப்படுகிறது.