சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், " திரைப்பட நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவை பார்த்தேன்.
அதில் பட்டியலின மக்களை மிக கேவலமாக திட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். திரைப்பட துறையில் இருந்தே பட்டியலின சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களை கேவலமாக பேசி வீடியோ பதிவிட்ட மீரா மிதுன் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.