தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்.பி கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்குப் பதிவு! - DMK Kanimozhi

சென்னை : சட்டவிரோதமாக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதாக திமுக எம்.பி கனிமொழி உள்பட 191 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திமுக எம்.பி கனிமொழி உட்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு...!
திமுக எம்.பி கனிமொழி உட்பட 191 பேர் மீது வழக்குப்பதிவு...!

By

Published : Oct 6, 2020, 10:38 AM IST

திமுக மகளிர் அணி சார்பாக ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று (அக்.05) பேரணி நடைபெற்றது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி வேண்டியும், ராகுல் காந்தியிடம் உ.பி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இப்பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் திமுக மகளிர் அணியினர், செயலர் கனிமொழி தலைமையில் தீப்பந்தம் ஏந்தி, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது கனிமொழி உள்பட அனைவரையும் தடுத்து நிறுத்திகைது செய்தகாவல் துறையினர், பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் இன்று (அக்.06) அரசு உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக திமுக எம்பி கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் உள்பட 191 திமுகவினர் மீது, சட்ட விரோதமாகக் கூடுதல், தொற்று நோய் பரப்பும் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது - கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details