தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கரோனாவால் மேலும் ஒரு காவலர் உயிரிழப்பு - police died by covid-19

சென்னை: கரோனா தொற்றால் சென்னையில் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்திருப்பது காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவலர் கரோனாவுக்கு பலி  சென்னை செய்திகள்  சென்னையில் கரோனா தொற்று  chennai news  chennai corona infection  police died by covid-19
சென்னையில் கரோனா தொற்றால் மேலும் ஒரு உதவி ஆய்வாளர் பலி

By

Published : Jul 14, 2020, 11:50 AM IST

Updated : Jul 14, 2020, 6:07 PM IST

சென்னை தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்துவந்த குருமூர்த்தி (55), காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார். சில நாள்களுக்கு முன்பு கரோனா தடுப்புப் பணிக்காக மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்தச் சூழலில், இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 23ஆம் தேதி குரோம்பேட்டை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துள்ளார்.

அதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, 27ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்துவந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 14) காலை உயிரிழந்தார். இதனால் கரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்த காவல் துறையினரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:'பொதுமக்களிடம் காவல் துறையினர் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்'- காவலர்களுக்கு அறிவுரை!

Last Updated : Jul 14, 2020, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details