உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் தமிழ்நாட்டில் நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை வரும் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கரோனா குறித்த விழிப்புணர்வையும், கிருமி நாசினி மருந்தும் வருகை தரும் பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களின் கையில் கிருமி நாசினி மருந்தை தெளித்து சுத்தமாகக் கை கழுவி உள்ளே காவலர்கள் அனுப்புகின்றனர்.